என் பயணங்கள் - ஏமன் (5)


 பணிகளில் தீவிரமானாலும் இடை இடையே தன்  கணவன், குழந்தையுடன்  மற்றும் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசுவது  மனதிற்கு நல்ல ஒரு ஆறுதலை தந்தது. அந்த நாட்களில்(2014) வீடியோ கால் வசதி எல்லாம் கிடையாது  நாட்கள் மிக வேகமாக செல்ல ஆரம்பித்தது எந்த பண்டிகை என்றாலும் இந்தியர்கள் அனைவரும் சேர்ந்து ஒரே வீட்டில் (Flat) சமைத்து சாப்பிடுவது, பிறந்தநாள், திருமண நாள் என்று ஒன்றாக கொண்டாவோம் அல்லது ஒன்றுகூடுவதிற்கு இந்த நாட்கள் தேடி கண்டடையப்பட்டது என்று கூறலாம். இவ்வாறாக நன் எனது கவனத்தை மாற்றி உற்ச்சாகமானேன்.

சில தனிமைகள் பிறருக்கு தெறியாமல் அழுகையில் கடந்ததும் உண்டு. எவ்வாறேனும் எனது கனவுகள் எல்லாம் கொஞ்சம் நாட்களில் நிறைவேறிடும் அதன் பின் கவலைகளும் தேவைகளும் மாறி

  


என்  குடும்பம் செழித்திருக்கும்  என்று என நாட்கள் கடந்தன. சில மாதங்களில் கணவன் மற்றும் குழந்தை என்னிடத்திற்கு வர ஏற்பாடுகளும் செய்ய வேண்டும் அதன்பின் ஒன்றாக இருக்கலாம் என்று கனவுகள் இன்னும் கொஞ்சம் பெரிதானது.


ஒவ்வொரு பகலும் இரவும் வேகமாக கடந்து நாட்கள் போறதே தெரியாத அளவுக்கு என்னுடைய பணியில் மும்மரமாக செயல் பட தொடங்கினேன்.  இதற்கிடையே எந்த இந்திய உயர் அதிகாரிக்கு
நேரம் போகவில்லையென்றால் நான்  தான்  அன்று அவர்களுக்கு அடிமை. வேலை செய்யும் இடத்திலும் அநேக பிரச்சனைகள் எல்லாவற்றையும் தாங்கி கொண்டே என் கணவனையும் குழந்தையும் ஏமன் நாட்டிற்கு அழைப்பதற்கு ஏற்பாடுகளை செய்ய தொடங்கினேன்.  முதல் மாதம் சம்பளம் மட்டும் கணவனுக்கு அனுப்ப முடிந்தது அடுத்தடுத்த மாதங்கள் விசா மற்றும் NOC க்காக கையில் சேமிக்க தொடங்கினேன். இப்படியாக 5 மாதங்கள் ஓடியது நானும் சலிக்காமல் எந்த இடையூறு வந்தாலும் எல்லா ஏற்பாடுகளையும் செய்தேன். இதோ இந்த மாதம் வந்துவிட்டால் அடுத்த மாதத்திலிருந்து பிரச்சனை இருக்காது என்றெண்ணி 5 மாத சம்பளம் இதற்காகவே பயன்பட்டது.

அன்று நான் மிகவும் சந்தோசமாக இருந்தேன் அறை தோழிகளிடம் என் கணவனும் குழந்தையும் வருகிறார்கள் என்று சந்தோசத்தில் நிரம்பினேன். டிக்கெட் எல்லாம் எடுத்து அனுப்பப்பட்டது. இன்னும் இரண்டே நாட்களில் வந்துவிடுவார்கள் . 

 

https://en.wikipedia.org/wiki/Sanaa_International_Airport

ஒரு வழியாக இன்று மதியம் 2 மணிக்கு எனது கணவரும் குழந்தையும் ஏமன் சனா விமான நிலையத்தில் வந்தடைவார்கள். காலையில் எழுந்து புறப்பட தயாரானேன். கார் வந்தது, ஏறினேன் Taiz லிருந்த 5 மணிநேர பயணம் அவர்களை நினைத்து கரைந்து போனது. ஐந்து மாதங்கள் கழித்து எனது குழந்தையை பார்க்க மிகுந்த ஆவலோடு 1 மணிக்கே வந்தடைந்து விட்டேன். இன்னும் ஒரு மணி நேரம் மட்டுமே எனது குழந்தையை பார்க்க.


(தொடரும் )

(நன்றி படங்கள் இணையத்திலிருந்து )

 

முந்தய பதிவுகளுக்கு :

என் பயணங்கள் - ஏமன் - (1)

என் பயணங்கள் - ஏமன் - (2)

என் பயணங்கள் - ஏமன் (3)

 

கருத்துகள்

  1. தாங்கள் குழந்தையைக் கண்டு மகிழ்ந்ததையும், கணவரைக் கண்டு நெகிழ்ந்ததையும் அறிய ஆவலோடு காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. ஆஹா... உங்கள் வாழ்வின் தாய்மையுடன் கூடிய அந்த நெகிழ்ச்சியான தருணத்தை அறிய மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் பயணங்கள் - ஏமன் - (1)

என் பயணங்கள் - ஏமன் (4)