என் பயணங்கள் - ஏமன் - (1)

முன்னுரை:
வெளிநாட்டிற்கு சென்று சம்பாதிக்கலாம் என்றவுடன் கிடைத்த வேலை ஏமன் நாட்டிற்கு. சென்றேன், கணவரையும் குழந்தையும் அழைத்தேன், ஆனால் விதி உள் நாட்டு போர் முற்றி, குடும்பமாக காரில் 5 மணி நேரம் துப்பாக்கி சத்தத்துடன் பிரயாணப்பட்டு, இந்திய கடற்படை கப்பலில் ஏறி ஆப்பிரிக்கா வழியாக 15 நாட்கள் கழித்து கொச்சி வந்தடைத்தோம்.

இரவு நேரம், நட்சத்திரங்கள் வானில் பிரதிபலிக்க நிலா முழுமையாக தன்னை வெளிக்காட்ட, என் வீட்டிலோ விளக்குகள் அணையாமல் எரிந்து கொண்டிருந்தது, தாதியர் படிப்பு முடித்து சென்னையில் ஓர் மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன், கணவர் Software Engineer தி.நகரில் ஒரு கம்பெனியில் பனி புரிகிறார் கூடவே அழகான 1 1/2 வயது மகள்.

 இப்பொழுது எனக்கு ஏமன் நாட்டில் ஒரு மருத்துவமனையில் கிடைத்த பணிக்காக இரவு புறப்படவேண்டும். அதுதான் வீட்டில் விளக்குகள் அணையவில்லை, மிகவும் பரபரப்பாக தயாராகிக்கொண்டிருக்கிறோம், காலை 5 மணிக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து Gulf Air விமானம் மூலம் செல்ல வேண்டும். சுறுசுறுப்பாக தயாராகி கொண்டிருந்தாலும் கணவரையும், எனது ஒரே ஒரு மகளையும் பிரிவது மட்டும் மனதில் கவலையாக இருந்தது.

எனது குடும்பம் ஒரு நடுத்தர குடும்பம் தான், வெளிநாட்டிற்கு போனால் சின்ன சின்ன கனவுகள் நிறைவேற்ற முடியும் என்ற எண்ணத்தில் வெளிநாட்டு வேலைக்கு ஒப்பு கொண்டன். மகளின் எதிர் காலத்திற்கு தானே செல்கிறோம் என்று நினைத்துக் கொண்டு கண்களில் எட்டி பார்த்த கண்ணீர் துளியையும் துடைத்துக்கொண்டேன்  மற்றவருக்கு தெரியாமல்.

நடு இரவு 12 மணிக்கு எங்கள் காரில் விமான நிலையத்திற்கு புறப்பட தயாரானோம், நன், கணவர் மற்றும் பெற்றோர் என அனைவரும் ஏறி கொண்டோம். எனது செல்ல மகளை மடியில் அமர்த்தி கொண்டு, அவளுக்கு அறிவுரையை தொடங்கினேன், மகளே அம்மா பொய் வருகிறேன் செல்லம் நல்ல பிள்ளையாய் அப்பா சொல் கேட்டு இருக்க வேண்டும். அம்மா சீக்கிரம் உன்னை அழைத்து செல்கிறேன் என்றேன். அவளுக்கு புரிந்ததோ என்னவோ தலையை ஆட்டிக்கொண்டு, என் தோள் மேல் சாய்ந்து கொண்டது. ஆனால் குழந்தையின் கண்களிலும் துளி எட்டி நின்று என் தோளில் நனைத்தது.

புறப்பட்ட 20 நிமிடத்தில் சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்தடைந்தது. அந்த நடு  இரவிலும் ஓன்றுக்கு ஓன்று போட்டிபோட்டுக்கொண்டு ஆயிரக்கணக்கான விளக்குகள் இரவை மறைத்து பகலை உமிழ்ந்து கொண்டிருந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் சொந்தங்களை அனுப்புவத்திற்கு வந்திருந்தனர், அதில் சிலர் கண்களை துடைத்து கொண்டு விம்மி கொண்டிருந்தனர்.

இனி இரண்டு வருடம் கழித்து தான் என் கணவரையும் மகளையும் பார்க்க முடியும் என்று மனதில் அழுது கொண்டே check -in  நோக்கி கிளப்ப தயாரானேன். அம்மா அப்பா -விடம் உடம்பை பார்த்து கொள்ளுங்கள் நான் சென்று வருகிறேன் என்று கூறி, என் கணவரை ஓடி போய் கட்டி அணைத்து கொண்டேன்,

அவரோ பிரிவின் சோகத்தை மறைத்துக் கொண்டு என் நெற்றியில் அன்பு முத்தங்களை பொழிந்தான். அங்கு சில மணித்துளிகள் வார்த்தைகள் மௌனமையின, அந்த மௌனத்தின் மொழி எனக்கும் அவனுக்கும் மட்டுமே புரிந்தன பின்பு இவை அனைத்தையும் என்னவென்று அறியாமல் விளையாடி கொண்டிருந்த  குழந்தையை அணைத்து கொண்டு சில முத்தங்களோடு

என் செல்ல மகளை கணவனிடம் ஒப்படைத்துவிட்டு விடை பெற்றேன்.
--அடுத்து சென்னை to ஏமன்
(நன்றி படங்கள் இணையத்திலிருந்து ) 

கருத்துகள்

  1. எனக்கு இந்த உலகத்திலேயே மிகவும் பிடித்தது பயணக்கட்டுரைகள் மற்றும் வரலாற்று கட்டுரைகள்தான்... தங்களுடைய ஏமன் பயணம் தொடக்கத்திலேயே மனதை நெகிழ வைக்கிறது. நானும் பயணத்தை தொடர்கிறேன்!!!...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் பயணங்கள் - ஏமன் (5)

என் பயணங்கள் - ஏமன் (4)