இடுகைகள்

என் பயணங்கள் - ஏமன் (5)

படம்
 பணிகளில் தீவிரமானாலும் இடை இடையே தன்  கணவன், குழந்தையுடன்  மற்றும் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசுவது  மனதிற்கு நல்ல ஒரு ஆறுதலை தந்தது. அந்த நாட்களில்(2014) வீடியோ கால் வசதி எல்லாம் கிடையாது  நாட்கள் மிக வேகமாக செல்ல ஆரம்பித்தது எந்த பண்டிகை என்றாலும் இந்தியர்கள் அனைவரும் சேர்ந்து ஒரே வீட்டில் (Flat) சமைத்து சாப்பிடுவது, பிறந்தநாள், திருமண நாள் என்று ஒன்றாக கொண்டாவோம் அல்லது ஒன்றுகூடுவதிற்கு இந்த நாட்கள் தேடி கண்டடையப்பட்டது என்று கூறலாம். இவ்வாறாக நன் எனது கவனத்தை மாற்றி உற்ச்சாகமானேன். சில தனிமைகள் பிறருக்கு தெறியாமல் அழுகையில் கடந்ததும் உண்டு. எவ்வாறேனும் எனது கனவுகள் எல்லாம் கொஞ்சம் நாட்களில் நிறைவேறிடும் அதன் பின் கவலைகளும் தேவைகளும் மாறி    என்  குடும்பம் செழித்திருக்கும்  என்று என நாட்கள் கடந்தன. சில மாதங்களில் கணவன் மற்றும் குழந்தை என்னிடத்திற்கு வர ஏற்பாடுகளும் செய்ய வேண்டும் அதன்பின் ஒன்றாக இருக்கலாம் என்று கனவுகள் இன்னும் கொஞ்சம் பெரிதானது. ஒவ்வொரு பகலும் இரவும் வேகமாக கடந்து நாட்கள் போறதே தெரியாத அளவுக்கு என்னுடைய ப...

என் பயணங்கள் - ஏமன் (4)

படம்
 அகன்று, விரிந்த, பரந்த சாலைகளில் வாகனங்கள் அங்கும் இங்குமாக சென்று கொண்டிருந்ததன. சாலைகளில் விளக்குகள் நட்சத்திரங்களை போல பிரகாசித்தது. ஓட்டுநர் எங்களிடம் இது தான் நீங்கள் வேலை பார்க்க போகும் மருத்துவமனை என்றார். பார்த்த எங்களுக்கோ பிரமிப்பு, ஏனென்றால் அது ஓர் மலையின் மேல் மின்னிக்கொண்டிருந்தது. விளக்குகளின் வெளிச்சம் மட்டும் தான் பார்க்க முடிந்தது. இன்னும் 5 நிமிடத்தில் நாம் உங்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று விடலாம் என்று பேசிக்கொண்டே போகும் போதே எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இடம் வந்தது. நங்கள் இருவரும் காரில் இருந்து இருக்கும்போதே கடும் பசி, புது இடம், புது நபர்கள் எப்படி இருக்குமோ என்ற பயம் வேறு. டிரைவர் எங்கள் உடைமைகளை எடுத்து வைத்து விட்டு விடைபெற்று கொண்டார். நங்கள் உள்ளே செல்ல தயாரானோம். கதவு திறந்தவுடன் வாங்க வாங்க என்று தமிழில் சத்தம் கேட்ட திசை நோக்கி நிமிர்ந்து பார்த்தால் அங்கே முழுவதும் இந்திய முகங்கள். ஆம் அந்த குடியிருப்பு முழுவதும் எங்கள் மருத்துவமனையில் பணிபுரியும் இந்தியர்கள். எங்களை உற்சாகமாக வரவேற்றனர். எங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று குழ...

அப்பம் தின்ற முயல்

படம்
அது ஒரு மலைக்காடு ஒரு பெரிய மலை. அதன் சரிவுகளில் பெரிய பெரிய மரங்கள் வளர்ந்து காடாய் மண்டி போய் கிடந்தது. அந்த மலைக்காட்டில் ஒரு முயல் இருந்தது. ஒரு நாள் அந்த குட்டி மையல் காட்டுக்குள்ளே  அங்கும் இங்குமாக துள்ளி பாய்ந்து குதித்துக் கும்மாளம் போட்டது. பாய்ந்து பாய்ந்து ஓடிக் கொண்டிருந்த அந்த குட்டி முயலுக்குத் திடீரென ஓர் ஆசை தோன்றியது. மலை உச்சி வரை போய்ப்பார்த்து விடவேண்டும் என்பது தன அந்த ஆசை. உடனே அது உச்சி நோக்கி பாய்ந்து செல்ல தொடங்கியது. மரங்களுக்கிடையே புல்வெளிகளிலே குறுக்கும் நெடுக்குமாக வளர்ந்திருந்த செடிகளையும், கொடிகளையும், புதர்களையும் தாண்டிக் குதித்து மேலே மேலே சென்று கொண்டிருந்தது. போக போக மலை உச்சி நெருங்கி வருவதாகத் தெரியவில்லை. மலை அவ்வளவு உயரமாக இருந்தது. குட்டி முயல் நினைத்த செயலை முடிக்காமல் தூங்காது போல் இருந்தது. சிறிது கூட அயராது அது துள்ளி பாய்ந்து சென்று கொண்டிருந்தது. அது உச்சி சென்று சேர்ந்த நேரம் இருட்டி விட்டது. உச்சியில் நின்று அந்த குட்டி முயல் சுற்று முற்றும் பார்த்தது மலையடிவாரத்தில் இருந்த பெரிய பெரிய மரங்களெல்லாம் சின்ன சின்ன செடிகள் போல் காட்சிய...

என் பயணங்கள் - ஏமன் (3)

படம்
ஏமன் தலை நகர் சனா (Sana) வில் இரங்கி எல்லா airport Procedures ம் முடித்து வெளியே வரும்போது ஒருவர் வந்து ஆங்கிலத்தில் அவர்  நங்கள் வேலை பார்க்க போகும் மருத்துவமனையிலிருந்து அழைத்து செல்ல வந்திருப்பதாக தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு எங்களுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு காரை நோக்கி அழைத்து சென்றார். எதாவது சாப்பிடுகிறீர்களா என்றதிற்கு, நன் அவசரமாக வேண்டாம் என்றேன். இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் ஏற்றத்திற்கு ஐந்து அல்லது ஆறு மணிநேரம் ஆகும் என்ற பதில் கிடைத்தது. கார் புறப்பட்ட சிறிது நேரத்தில் நங்கள் இருவரும் பயண களைப்பினால் தூங்க ஆரம்பித்தோம். எங்கள் வாகனமோ மலைகள் மேல் ஏறுவதும், இறங்குவதுமாய் சென்று கொண்டிருந்தது. கண் விழித்து பார்க்கும்போது ஏதோ பைபிளில் கூறப்பட்ட இடம் போல காட்சிகள். எப்படியோ ஆறு மணி நேரத்தில் நங்கள் வரவேண்டிய Taiz நகருக்கு வந்துவிட்டதாக ஓட்டுநர் கூறினார்.  (நன்றி படங்கள் இணையத்திலிருந்து )
படம்
கண் கண்ட கணவன் ஏண்டி அழகேஸ்வரி அந்த மாப்பிளையை  தான் வேணும்னு அடம் பிடிக்குற ?உனக்கு இந்த ஊர்ல வேற யாருமேயில்லையா? அவன் நல்வாவா இருக்கான்?  ஏன் டீ இப்படி பண்ற? முடியாதும்மா கட்டுனா  அவனை தான் கட்டுவேன், உன்னால கல்யாணம் பண்ணி வைக்க முடியுமா? முடியாதா ? ஏம்மா உனக்கும் அவனுக்கும் பொருத்தமே இல்லையேடி! அடியே! அவன் புள்ளையார் மாதிரி இல்ல! இல்ல புள்ளையார் கூட தோத்துவிடுவார் அப்படி இருக்கான்! அவனை போய்  என்னனு  சொல்ல தெரியல! நீ எப்படி இருக்க பேருக்கு ஏத்த மாதுரி லட்சணமா, நம்ம ஆத்துல அவன யாருக்குமே  பிடிக்கலடி சொன்ன கேளுடி. ஆத்துல யாருக்குமே பிடிக்க வேண்டாம் எனக்கு பிடிச்ச போதும் ,நாளைக்கு அவா வீட்டுல இருந்து வருவாங்க சம்மதம் சொல்லு இல்ல னா  என்ன உயிரோட பாக்க மாட்ட!                                                                             ...

The Day or yours - Today

படம்

என் பயணங்கள் - ஏமன் - (2)

படம்
இம்மிகிரேஷன், Check-in முடித்து, விமானத்திற்காக காத்திருந்தேன், நன் மட்டும் தனியாக செல்லவில்லை, அதே மருத்துவமனையில் பணிபுரிய போகும் ஒரு பெண்ணும் உடன் இருந்தார்கள். விமான பயணம் எனக்கு புதிது  அல்ல என்றாலும் ஒருவிதமான என்னவென்று அறியாத பதட்டம் இருந்தது. விமானம் தயாராக உள்ளது என்று ஒலி பெருகியின் அழைப்பு கேட்டு விமானத்தை நோக்கி நடக்கலானேன். உடன் வந்த சகோதரியும் நானும் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டே எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். இப்பொழுது அவசரம் இருவருக்கும் விமானம் கிளம்பும் முன் தன் கணவனிடம் பேச வேண்டும் ஏனென்றால் அடுத்து ஒன்பது மணி நேரம் யாரிடமும் பேச முடியாது ( Chennai - Bahrain : 4 hours, Bahrain - Sana, Yemen : 2 hours, Sana - Taiz : 5 hours in car ) நடுவில் 4 மணிநேரம் பஹரைனில் காத்திருக்க வேண்டும் அப்போது முயறிச்சி செய்தால் பேசலாம். ஒரு வழியாக அழுகையுடன் பேசி முடிக்கவும் விமான பணிப்பெண் அருகில் வந்து Could you please turn off your phone? என்று கூறினாள். உடனே அலைபேசியை அணைத்துவிட்டு இருவரும் எங்கள் அறிமுக படலத்தை தொடர்ந்தோம். விமானம் புறப்பட தயாரானது...