கண் கண்ட கணவன்

ஏண்டி அழகேஸ்வரி அந்த மாப்பிளையை  தான் வேணும்னு அடம் பிடிக்குற ?உனக்கு இந்த ஊர்ல வேற யாருமேயில்லையா? அவன் நல்வாவா இருக்கான்?

 ஏன் டீ இப்படி பண்ற? முடியாதும்மா கட்டுனா  அவனை தான் கட்டுவேன், உன்னால கல்யாணம் பண்ணி வைக்க முடியுமா? முடியாதா ?

ஏம்மா உனக்கும் அவனுக்கும் பொருத்தமே இல்லையேடி! அடியே! அவன் புள்ளையார் மாதிரி இல்ல! இல்ல புள்ளையார் கூட தோத்துவிடுவார் அப்படி இருக்கான்! அவனை போய்  என்னனு  சொல்ல தெரியல! நீ எப்படி இருக்க பேருக்கு ஏத்த மாதுரி லட்சணமா, நம்ம ஆத்துல அவன யாருக்குமே  பிடிக்கலடி சொன்ன கேளுடி.

ஆத்துல யாருக்குமே பிடிக்க வேண்டாம் எனக்கு பிடிச்ச போதும் ,நாளைக்கு அவா வீட்டுல இருந்து வருவாங்க சம்மதம் சொல்லு இல்ல னா  என்ன உயிரோட பாக்க மாட்ட!           


                                                                                                                                                                                                                                                                  
ம்ம்ம்ம்ம்ம் குரங்கு கைல பூமாலை கொடுத்த கதை தான்  உன் கதை ,அப்புறம் எங்கிட்ட வருத்த படக்கூடாது .                                                                                                                                                                       

              
அடுத்த நாள் மாப்பிளை விட்டார் வந்திருக்க வள்ளியம்மாள் மனது இல்லாமல் தன மகளுக்காக ஒருதலையாய்  சம்மதித்ததால் .திருமணம் நேர்த்தியாக நடைபெற்று முடிந்தது நாட்கள், வாரங்களாகி, வாரங்கள் மாதங்கள் ஆகி, மாதங்கள் போய்  வருடங்கள்ளாகின. இரண்டு குழந்தைகளுக்கு  தாயுமாகி இருந்தாள்.  நாட்கள்  உருண்டு ஓடியது அழகேஸ்வரி திருமணம், பிரசவம் எல்லாம் கடந்து கனவனுக்காகவும், பிள்ளைக்களுக்காவும் உழைத்து,  உடல் எடை பெருத்து அழகு குறைந்து இருந்தாள் .இது எல்லா பெண்களுக்கும் உரியது தானே ?   
                                                                                                                              


                                    
 ஏன்   அழகேஸ்வரி ,சொல்லுங்க மாமா, ஒன்னு சொன்ன செய்வீயா  புள்ள? ம்ம்ம்ம் சொல்லுங்க மாமா உங்களுக்கு செய்யம்மா வேற யாருக்கு மாமா? என் அம்மாவா எல்லாம் மீறி உங்கள நான் கல்யாணம்  பண்ணீருக்கேன் உங்கமேல அம்ம்புட்டு ஆசை மாமா, சொல்லுங்க என்ன செய்யணும்னு செஞ்சிபுடுறேன்                                                                                                                                 
                               
அதெல்லாம் பெருசா ஒன்னும் இல்ல நீ அப்போ இருந்த மாதுரி இப்போ இல்ல, கொஞ்சம் இல்ல இல்ல  ரொம்பவே குண்டு  ஆயிட்ட, ரொம்ப ஒரு மாதுரி இருக்க, ஆத்துல  கூட உன்ன ஏதாச்சும் பண்ணி உடம்ப குறைக்க சொல்லு னு சொல்லறாங்க ஏன்னா இப்பொ நம்மள பாக்குறதுக்கு அக்கா தம்பி போல இருக்காம் அதான் சொல்லறேன் தப்பா எடுத்துக்காத அழகு



ம்ம்ம்ம்ம் கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க எப்படி இருந்திங்களாம்? அது அப்போ டி ,அப்போ நீ உன்பேருக்கு ஏத்த  மாதுரி அவ்வளவு அழகு .


இப்போ என்ன சொல்ல வறீங்க ,கொஞ்சம் உடம்ப............                                                                                                                                                                                                                  போதும்டா சுவாமி ,எங்க அம்மா  அப்பவே  சொல்லுச்சு குரங்குனு, நா தான் கேட்கல எனக்கு இதுவும் வேணும்  இன்னமும்  வேணும் .தாய் சொல் கேட்காத வாவ்வால் தலைக்கீழா தான் தொங்குமாம் இப்பொ என் நிலைமையும் அதூதான்          ,..

ஒய் மனுஷா என்ன பார்த்து சொல்லிட்டீங்கல்ல  இனி  நான் பார்த்துக்குவேன்

    அழகு தன் அம்மாவை நினைத்து அழுதாள் தெய்வமே !








                                       


















(நன்றி படங்கள் இணையத்திலிருந்து )


       














                                                   

கருத்துகள்

  1. பலரது வாழ்வில் இதுதான் நிகழ்கிறது நண்பரே...
    - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே எமது தளத்தில் வந்து உற்சாகப்படுத்தியமைக்கு .

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் பயணங்கள் - ஏமன் (5)

என் பயணங்கள் - ஏமன் - (1)

என் பயணங்கள் - ஏமன் (4)