இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் பயணங்கள் - ஏமன் - (2)

படம்
இம்மிகிரேஷன், Check-in முடித்து, விமானத்திற்காக காத்திருந்தேன், நன் மட்டும் தனியாக செல்லவில்லை, அதே மருத்துவமனையில் பணிபுரிய போகும் ஒரு பெண்ணும் உடன் இருந்தார்கள். விமான பயணம் எனக்கு புதிது  அல்ல என்றாலும் ஒருவிதமான என்னவென்று அறியாத பதட்டம் இருந்தது. விமானம் தயாராக உள்ளது என்று ஒலி பெருகியின் அழைப்பு கேட்டு விமானத்தை நோக்கி நடக்கலானேன். உடன் வந்த சகோதரியும் நானும் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டே எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். இப்பொழுது அவசரம் இருவருக்கும் விமானம் கிளம்பும் முன் தன் கணவனிடம் பேச வேண்டும் ஏனென்றால் அடுத்து ஒன்பது மணி நேரம் யாரிடமும் பேச முடியாது ( Chennai - Bahrain : 4 hours, Bahrain - Sana, Yemen : 2 hours, Sana - Taiz : 5 hours in car ) நடுவில் 4 மணிநேரம் பஹரைனில் காத்திருக்க வேண்டும் அப்போது முயறிச்சி செய்தால் பேசலாம். ஒரு வழியாக அழுகையுடன் பேசி முடிக்கவும் விமான பணிப்பெண் அருகில் வந்து Could you please turn off your phone? என்று கூறினாள். உடனே அலைபேசியை அணைத்துவிட்டு இருவரும் எங்கள் அறிமுக படலத்தை தொடர்ந்தோம். விமானம் புறப்பட தயாரானது...

என் பயணங்கள் - ஏமன் - (1)

படம்
முன்னுரை: வெளிநாட்டிற்கு சென்று சம்பாதிக்கலாம் என்றவுடன் கிடைத்த வேலை ஏமன் நாட்டிற்கு. சென்றேன், கணவரையும் குழந்தையும் அழைத்தேன், ஆனால் விதி உள் நாட்டு போர் முற்றி, குடும்பமாக காரில் 5 மணி நேரம் துப்பாக்கி சத்தத்துடன் பிரயாணப்பட்டு, இந்திய கடற்படை கப்பலில் ஏறி ஆப்பிரிக்கா வழியாக 15 நாட்கள் கழித்து கொச்சி வந்தடைத்தோம். இரவு நேரம், நட்சத்திரங்கள் வானில் பிரதிபலிக்க நிலா முழுமையாக தன்னை வெளிக்காட்ட, என் வீட்டிலோ விளக்குகள் அணையாமல் எரிந்து கொண்டிருந்தது, தாதியர் படிப்பு முடித்து சென்னையில் ஓர் மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன், கணவர் Software Engineer தி.நகரில் ஒரு கம்பெனியில் பனி புரிகிறார் கூடவே அழகான 1 1/2 வயது மகள்.  இப்பொழுது எனக்கு ஏமன் நாட்டில் ஒரு மருத்துவமனையில் கிடைத்த பணிக்காக இரவு புறப்படவேண்டும். அதுதான் வீட்டில் விளக்குகள் அணையவில்லை, மிகவும் பரபரப்பாக தயாராகிக்கொண்டிருக்கிறோம், காலை 5 மணிக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து Gulf Air விமானம் மூலம் செல்ல வேண்டும். சுறுசுறுப்பாக தயாராகி கொண்டிருந்தாலும் கணவரையும், எனது ஒரே ஒரு மகளையும...