என் பயணங்கள் - ஏமன் - (1)
முன்னுரை: வெளிநாட்டிற்கு சென்று சம்பாதிக்கலாம் என்றவுடன் கிடைத்த வேலை ஏமன் நாட்டிற்கு. சென்றேன், கணவரையும் குழந்தையும் அழைத்தேன், ஆனால் விதி உள் நாட்டு போர் முற்றி, குடும்பமாக காரில் 5 மணி நேரம் துப்பாக்கி சத்தத்துடன் பிரயாணப்பட்டு, இந்திய கடற்படை கப்பலில் ஏறி ஆப்பிரிக்கா வழியாக 15 நாட்கள் கழித்து கொச்சி வந்தடைத்தோம். இரவு நேரம், நட்சத்திரங்கள் வானில் பிரதிபலிக்க நிலா முழுமையாக தன்னை வெளிக்காட்ட, என் வீட்டிலோ விளக்குகள் அணையாமல் எரிந்து கொண்டிருந்தது, தாதியர் படிப்பு முடித்து சென்னையில் ஓர் மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன், கணவர் Software Engineer தி.நகரில் ஒரு கம்பெனியில் பனி புரிகிறார் கூடவே அழகான 1 1/2 வயது மகள். இப்பொழுது எனக்கு ஏமன் நாட்டில் ஒரு மருத்துவமனையில் கிடைத்த பணிக்காக இரவு புறப்படவேண்டும். அதுதான் வீட்டில் விளக்குகள் அணையவில்லை, மிகவும் பரபரப்பாக தயாராகிக்கொண்டிருக்கிறோம், காலை 5 மணிக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து Gulf Air விமானம் மூலம் செல்ல வேண்டும். சுறுசுறுப்பாக தயாராகி கொண்டிருந்தாலும் கணவரையும், எனது ஒரே ஒரு மகளையும...