என் பயணங்கள் - ஏமன் (4)

 அகன்று, விரிந்த, பரந்த சாலைகளில் வாகனங்கள் அங்கும் இங்குமாக சென்று கொண்டிருந்ததன. சாலைகளில் விளக்குகள் நட்சத்திரங்களை போல பிரகாசித்தது. ஓட்டுநர் எங்களிடம் இது தான் நீங்கள் வேலை பார்க்க போகும் மருத்துவமனை என்றார். பார்த்த எங்களுக்கோ பிரமிப்பு, ஏனென்றால் அது ஓர் மலையின் மேல் மின்னிக்கொண்டிருந்தது. விளக்குகளின் வெளிச்சம் மட்டும் தான் பார்க்க முடிந்தது.


இன்னும் 5 நிமிடத்தில் நாம் உங்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று விடலாம் என்று பேசிக்கொண்டே போகும் போதே எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இடம் வந்தது. நங்கள் இருவரும் காரில் இருந்து இருக்கும்போதே கடும் பசி, புது இடம், புது நபர்கள் எப்படி இருக்குமோ என்ற பயம் வேறு. டிரைவர் எங்கள் உடைமைகளை எடுத்து வைத்து விட்டு விடைபெற்று கொண்டார். நங்கள் உள்ளே செல்ல தயாரானோம்.


கதவு திறந்தவுடன் வாங்க வாங்க என்று தமிழில் சத்தம் கேட்ட திசை நோக்கி நிமிர்ந்து பார்த்தால் அங்கே முழுவதும் இந்திய முகங்கள். ஆம் அந்த குடியிருப்பு முழுவதும் எங்கள் மருத்துவமனையில் பணிபுரியும் இந்தியர்கள்.


எங்களை உற்சாகமாக வரவேற்றனர். எங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று குழித்து விட்டு அவர்களுடன் இரவு உணவு உண்டு உறங்க செல்ல தயாரானோம் அப்பொழுது மருத்துவமனை உயர் பெண் இந்திய அதிகாரி வந்து நாளை காலையில் 7 மணிக்கு தயாராகிவிடுங்கள் வண்டி வந்துவிடும், நாம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறி சென்றார்.






நானும் என்னுடன் வந்த சகோதரியும் காலையில் சொன்ன மாதிரியே புறப்பட்டு வெளியே காத்திருந்தோம். 7 மணிக்கு கார் வந்தது அப்போதுதான் எல்லோரும் பணிக்கு புறப்பட்டு தங்கள் தங்கள் வாகனங்களில் ஏறினோம். அடுத்த 10 நிமிடத்தில் மருத்துவமனையை அடைந்தது. ஒரு வித பயத்துடன் காரில் இருந்து இறங்கி அந்த உயர் அதிகாரியுடன் அலுவலகத்திற்கு அழைத்து சென்றாள்.



அயல் நாடுகளில் தங்கள் குடும்பங்களையும், சொந்தங்களையும், சொந்த நாட்டையும் விட்டு விட்டு அந்நிய நாட்டில் ஜாதி மதம் இவற்றை எல்லாம் மறந்து இந்தியன் என்ற ஓற்றை காரணத்தினால் அனைவரும் சொந்தங்கள் ஆகிறோம் என்றண்ணி நானும் என்னை சமாதானப்படுத்தி கொண்டு சந்தோசமாக இருக்க முயல்கிறேன்.


முதல் நாள் வேலை பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழி இன்றி என்னை ஈடுபடுத்தி கொண்டேன். அன்று மாலையில் பணி ,முடிந்து அறைக்கு வந்தாலும் என் உடல் மட்டுமே அங்கிருந்து மனது முழுவதும் இந்தியாவில் விட்டு வந்துள்ள கணவனையும் செல்ல மகளையுமே தேடி கொண்டிருந்தது. அப்பொழுதுதான் தனிமை இனிமை என தோன்றியது.  என் அறையில் அடியாளையும் சேர்த்து 5 பேர்  இருந்தனர், இரவு பணிமுடிந்து வந்தவுட ஒவொருவராக தங்களை அறிமுகப்படுத்த கொஞ்சம் மனதுக்கு மாறுதலாக இருந்தது. அடுத்தத்த நாட்களில் என் பணிகளிலே முழுமனதோடு செயல்பட முடிந்தது.

- இன்னும் தொடரும்

முந்தய பதிவிற்கு:

என் பயணங்கள் - ஏமன் - (1)

என் பயணங்கள் - ஏமன் - (2)

என் பயணங்கள் - ஏமன் (3)


(நன்றி படங்கள் இணையத்திலிருந்து )

கருத்துகள்

  1. குடும்பத்தைப் பிரிந்து , குடும்பத்தித்தாக வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்கும் ஒரு மனது வேண்டும்.
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா எமது தளத்தில் வந்து பார்வையிட்டமைக்கு உற்சாகப்படுத்தியமைக்கு.

      நீக்கு
  2. பயணக்கட்டுரை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் செல்கிறது. இதில் காட்டப்பட்டுள்ள அந்த படத்திலிருப்பதுதான் நீங்கள் பணிபுரிந்த மருத்துவமனையா? அல்லது இது வேறு புகைப்படமா? உண்மையில் அந்த கட்டிடம் பார்க்க பிரமாண்டமாக உள்ளது!!!.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் பயணங்கள் - ஏமன் (5)

என் பயணங்கள் - ஏமன் - (1)