அப்பம் தின்ற முயல்

அது ஒரு மலைக்காடு ஒரு பெரிய மலை. அதன் சரிவுகளில் பெரிய பெரிய மரங்கள் வளர்ந்து காடாய் மண்டி போய் கிடந்தது. அந்த மலைக்காட்டில் ஒரு முயல் இருந்தது.


ஒரு நாள் அந்த குட்டி மையல் காட்டுக்குள்ளே  அங்கும் இங்குமாக துள்ளி பாய்ந்து குதித்துக் கும்மாளம் போட்டது. பாய்ந்து பாய்ந்து ஓடிக் கொண்டிருந்த அந்த குட்டி முயலுக்குத் திடீரென ஓர் ஆசை தோன்றியது.


மலை உச்சி வரை போய்ப்பார்த்து விடவேண்டும் என்பது தன அந்த ஆசை. உடனே அது உச்சி நோக்கி பாய்ந்து செல்ல தொடங்கியது. மரங்களுக்கிடையே புல்வெளிகளிலே குறுக்கும் நெடுக்குமாக வளர்ந்திருந்த செடிகளையும், கொடிகளையும், புதர்களையும் தாண்டிக் குதித்து மேலே மேலே சென்று கொண்டிருந்தது. போக போக மலை உச்சி நெருங்கி வருவதாகத் தெரியவில்லை. மலை அவ்வளவு உயரமாக இருந்தது.



குட்டி முயல் நினைத்த செயலை முடிக்காமல் தூங்காது போல் இருந்தது. சிறிது கூட அயராது அது துள்ளி பாய்ந்து சென்று கொண்டிருந்தது. அது உச்சி சென்று சேர்ந்த நேரம் இருட்டி விட்டது.

உச்சியில் நின்று அந்த குட்டி முயல் சுற்று முற்றும் பார்த்தது மலையடிவாரத்தில் இருந்த பெரிய பெரிய மரங்களெல்லாம் சின்ன சின்ன செடிகள் போல் காட்சியளித்தன. ஏரி , குலங்களெல்லாம் சிறிய சிறிய பள்ளங்கள் போல் தோன்றின. கிழக்கு பக்கத்தில் இருந்த கடல் ஓர் ஏரியைப் போல் காட்சியளித்தது. அப்பொழுது கடலின் அடி மட்டத்திலிருந்து வெள்ளை நிறமான ஓர் அப்பம் வெளிவந்தது.



அந்த அப்பத்தை பார்க்க பார்க்க குட்டி முயலுக்கு அதை கடித்து தின்ன வேண்டும்போல் இருந்தது. உடனே கீழ் நோக்கி பாய்ந்தது. சிறிது தொலைவு கீழே இறங்கியவுடன் கிழக்கு திசையில் திரும்பி பார்த்தது. அந்த அப்பம் மேலே வந்து கொண்டிருந்தது. கடலில் தோன்றி வந்த நிலவைதான் குட்டி முயல் அப்பம் என்று நினைத்தது.



அப்பம் மேலே வந்து கொண்டிருக்கிறது. அது அருகில் வந்த உடன் பிடித்து தின்னலாம். ஏன் கீழே இறங்க வேண்டும். இவ்வாறு எண்ணிய குட்டி முயல் அந்த இடத்திலேயே நின்று மேலே வரும் அப்பத்தை பார்த்து கொண்டிருந்தது. அப்பம் மேலே மேலே வந்தது. அனால் முயல் குட்டிக்கு அருகில் வரவில்லை. தொலைவிலேயே இருந்தது. தொலைவில் இருந்தபடியே வானத்தின் உச்சிக்கு பொய் விட்டது.


மலை உச்சியிலிருந்து வானத்து உச்சியையே பார்த்துக் கொண்டிருந்த முயல் குட்டிக்கு அழுகை அழுகையாக வந்தது அப்பம் எட்டவில்லையே என்று கத்தி கதறி அழுது கொண்டிருந்தது.



அப்போது அந்த வழியாக ஒரு காட்டு யானை வந்தது.

'யானையாரே, யானையாரே உச்சியில் இருக்கும் அப்பம் என்னக்கு எட்டவில்லை. உங்கள் நீண்ட துதிக்கையால் அதை பிடித்து தாருங்கள்' என்று குட்டி மயல் கேட்டது.


யானை வானத்தை நோக்கி தன துதிக்கையை நீட்டி அப்பத்தை பிடிக்க முயன்றது. அந்த முயற்சியில் தன்  முன்னங்கால் இரண்டையும் மேலே தூக்கி துதிக்கையை நீட்டி கொண்டு அது எழுந்து நின்ற பொழுது தடுமாறி மலைச்சரிவில் உண்டு விழுந்தது.



முயல்குட்டிக்கு மேலும் அழுகை வந்தது. யானையார் விழுந்து விட்டார் அவரைக் காப்பாற்றவும் முடியவில்லை. அப்பத்தை பிடிக்கவும் முடியவில்லை. என்ன செய்வேன் என்று சொல்லி அது 

அழுது கொண்டிருந்தது. அப்போது அந்த பக்கமாக ஒட்டகச்சிவிங்கி ஒன்று வந்தது, குட்டி முயல் அதை கூப்பிட்டது.



"சிவிங்கியாரே, சிவிங்கியாரே வானத்து உச்சியில் உள்ள அப்பத்தை பிடிக்க என்னால் முடியவில்லை. உங்கள் நெட்டை கழுத்தை நீட்டி அதை என்னக்கு பிடித்து தாருங்கள்" என்று குட்டி முயல் கேட்டது.

பாவம் குட்டி முயல் வானத்து அப்பத்துக்காக மிகவும் ஏங்குகிறது: பிடித்து தான் கொடுப்போமே என்று கூறி கொண்டே ஒட்டகசிவிங்கியார் தன நெட்டை கழுத்தை நீட்டி அந்த அப்பத்தைப்பிடிக்க முயன்றார். அனால் அந்த வானத்து அப்பத்தை அவரால் எட்டி பிடிக்க முடியவில்லை.

'குட்டி முயல், குட்டி முயல் எங்கே வா. என் தலையில் ஏறிகொள் உன்னை நான் வீசுகிறேன் நீ பாய்ந்து அந்த அப்பத்தை பிடித்துக்கொள்' என்று கூறியது.



உடனே குட்டி முயல் பரபரவென்று ஒட்டகசிவிங்கியின் மேல் ஏறி முதுகுக்கு சென்று கழுத்தின் தலை உச்சியை அடைந்தது. அதன் தலையில் ஏறி நின்றவுடன் ஒட்டகச்சிவிங்கி தன தலையை வேகமாக ஆட்டி குட்டி முயலை ஒரு தட்டுத் தட்டி உயரத்தில் வீசி விட்டது.



 ஒட்டகசிவிங்கியால் வீசியெறியப்பட்ட அந்த குட்டி முயல் அம்புபோல் பறந்து சென்ற அந்த வண்டத்தின் அப்பத்தை அடைந்தது.


 அந்த வானத்து அப்பம் குட்டிமுயலைப் போல் ஆயிரம் மடங்கு பெரியதாய் இருந்ததால், முயலால் அதை கடித்து தின்ன முடியவில்லை. அந்த அப்பம் தன முயலை விழுங்கி விட்டது.

நிலவை உற்று நோக்கினால் அதின் நடுவில் முயல் இருப்பதை காணலாம்.



பார்த்ததுண்டா ????


(நன்றி படங்கள் இணையத்திலிருந்து )

கருத்துகள்

  1. ஆகா !. அப்படியா?...அடுத்த வளர்பிறையின் போது வரும் அப்பத்தின் நடுவே இருக்கும் முயலை பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. ஆகா... இதுவரை நிலவில் ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருப்பதைத்தான் பார்த்திருக்கிறேன்... கூடவே ஒரு முயலும் இருக்கிறதா?!!!... அப்போ இனி அதையும் பார்த்துவிடவேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் பாட்டி காக்காவிடமிருந்து வடையை காப்பாற்ற பூனை வளர்க்கிறது போல !!!

      நீக்கு
    2. நன்றி எமது தளத்தில் வந்து பதிவிட்டமைக்கு.

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் பயணங்கள் - ஏமன் (5)

என் பயணங்கள் - ஏமன் - (1)

என் பயணங்கள் - ஏமன் (4)