என் பயணங்கள் - ஏமன் - (2)

இம்மிகிரேஷன், Check-in முடித்து, விமானத்திற்காக காத்திருந்தேன், நன் மட்டும் தனியாக செல்லவில்லை, அதே மருத்துவமனையில் பணிபுரிய போகும் ஒரு பெண்ணும் உடன் இருந்தார்கள்.

விமான பயணம் எனக்கு புதிது  அல்ல என்றாலும் ஒருவிதமான என்னவென்று அறியாத பதட்டம் இருந்தது. விமானம் தயாராக உள்ளது என்று ஒலி பெருகியின் அழைப்பு கேட்டு விமானத்தை நோக்கி நடக்கலானேன். உடன் வந்த சகோதரியும் நானும் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டே எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். இப்பொழுது அவசரம் இருவருக்கும் விமானம் கிளம்பும் முன் தன் கணவனிடம் பேச வேண்டும் ஏனென்றால் அடுத்து ஒன்பது மணி நேரம் யாரிடமும் பேச முடியாது (Chennai - Bahrain : 4 hours, Bahrain - Sana, Yemen: 2 hours, Sana - Taiz: 5 hours in car) நடுவில் 4 மணிநேரம் பஹரைனில் காத்திருக்க வேண்டும் அப்போது முயறிச்சி செய்தால் பேசலாம்.


ஒரு வழியாக அழுகையுடன் பேசி முடிக்கவும் விமான பணிப்பெண் அருகில் வந்து Could you please turn off your phone? என்று கூறினாள். உடனே அலைபேசியை அணைத்துவிட்டு இருவரும் எங்கள் அறிமுக படலத்தை தொடர்ந்தோம்.


விமானம் புறப்பட தயாரானது, சில நொடிகளில் விமானம் தரையை விட்டு தென் சிறகுகளால் மெல்ல பறக்க ஆரம்பித்தது எங்கள் கனவுகளும் சேர்ந்து.

என்னை அறியாண்மைலே கண்கள் முடிகொண்டது, கணவன் மற்றும் குழந்தையின் சிறு சிறு நியாபகங்கள், சில சில தீண்டல்கள், சந்தோசங்கள் ஒவொன்ற்றாய் மனக்கண் முன்னே வந்து சென்றது. தன் குடும்பத்திற்கு ஒரு வீடு, நல்ல கார் மற்றும் மத கடைசியில் கடன் வாங்காத வாழ்கை, கூடவே அப்பா, அம்மாகென்று ஒரு வீடு, தம்பி தங்கைக்கு வெளிநாட்டில் வேலை எல்லாம் நிறைவேற போகுது என்கிற ஏக்கத்தில் ஒரு பெருமூச்சோடு ஆழ்ந்த உறக்கம், சுமார் நான்கரை மணி நேரத்திற்கு பிறகு விமானி பேசும் சத்தம் கேட்டு விளிப்புறறேன்.

ஆம் விமானம் பஹரைன் வந்துவிட்டதாம்,.  சரி எப்படியாவது Transist நேரத்தில் கணவனோடு பேச வேண்டும் என்று ...........


சர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ............................ என்று தரை இறங்கிற்று. விமானத்திலிருந்து அனைவரும் புறப்பட தயாரானார்கள். நானும், கலை அக்காவும் (அதுதான் நங்கள் அறிமுகமாய்ட்டோமில்ல!!!).


(நன்றி படங்கள் இணையத்திலிருந்து )


கருத்துகள்

  1. அடியேனின் தளத்தில்தாம் வந்து போட்ட பின்னூட்டத்தை கண்டு இங்கே வந்தேன்.

    இது ஓர் பயண தொடரா? படிக்க ஆரம்பித்து சில நொடியில் முடிந்து விட்டது. இன்னும் சற்று விரிவாக எழுதலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் 3 வருட தாமதத்திற்கு வருந்துகிறேன்.

      எனது மனைவி ஒரு புத்தகத்தில் எழுதியதை வைத்து இந்த கட்டுரையை ஆரம்பித்து பின்னர் விட்டுவிட்டேன். தற்போது மறுபடியும் தொடங்கியுள்ளேன். தங்கள் அறிவுரைக்கு நன்றி கண்டிப்பாக பின்பற்றுவேன்.

      அலுவலகத்தில் தமிழ் Blogs என்று தேடியதில் உங்கள் blogs கிடைத்தது நானும் எனது மனைவியும் ஒரு 15 நாட்களில் தங்களின் அணைத்து Blogs களையும் படித்து முடித்து விட்டோம். இப்போதும் எனது அலுவலக மற்றும் தனிப்பட்ட மடிக்கணினி லிலும் Chrome புக்மார்க் ல் வைத்து தினமும் ஏதாவது Blogs எழுதியிருக்கிறீர்களா என்று பார்த்து படிப்பது உண்டு. பின்னுட்டம் மட்டும் ஏனோ இடவில்லை. முயற்சிக்கிறேன்.

      நன்றி!

      நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் பயணங்கள் - ஏமன் (5)

என் பயணங்கள் - ஏமன் - (1)

என் பயணங்கள் - ஏமன் (4)